திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (08:40 IST)

நடிகையுடன் ஆர்.டி.ஓ செய்த வேலை!!! மண்டையை உடைத்த பாய்ஃபிரண்ட்....

நடிகை ராகினி திவேதியுடன் அவரது நண்பரான ஆர்.டி.ஓ சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த மற்றொரு ஆண் நண்பர் அவரை பாட்டிலால் மண்டையை தாக்கியுள்ளார்.
 
2008ல் கன்னட திரையுலகில் அறிமுகமான ராகினி திவேதி, கன்னடம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 2012ல் ’அறியான்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ள ராகினி, சமுத்திரகனியின் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடித்துள்ளார். காவிரி பிரச்சனையின் போது தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கூறியவர் இந்த நடிகை.
 
இந்நிலையில் ராகினி தனது ஆண் நண்பரான ஆர்.டி.ஓ அதிகாரி ரவிசங்கருடன் பெங்களூருவில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே ராகினியின் முன்னாள் ஆண் நண்பர் வந்து ராகினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அவர், பீர் பாட்டிலை எடுத்து ரவிசங்கரின் தலையில் போட்டு உடைத்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னர் ரவிசங்கர் தன்னை தாக்கிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
புகாரின் பேரில் போலீஸார் ராகினியின் மற்றொரு ஆண் நண்பர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.