திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (18:08 IST)

அம்மாவுடனான சண்டையில் 3 மாத குழந்தையை கொன்ற மகள்!

சீர்காழி அருகே தாய்க்கும் மகளுக்கும் இடையே நடந்த சண்டையில்  3 மாதப் பெண் குழந்தை பரிதாபமாக இறந்துபோனது.


 
நாகை மாவட்டம், சீர்காழி அருகே  தொடுவாய்  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவ அம்புஜம்.  இந்த தம்பதிக்கு வினோதா என்ற மகள் உள்ளார்.  வினோதாவை வாணகிரி  கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரனை திருமணம் செய்து வைத்தனர்.  அந்தத் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இதனால்கணவனைப் பிரிந்து பெற்றோருடனே வினோதா வசித்து வந்தார். 
 
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த வினோதாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்  இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை அப்போதே இறந்துவிட, மற்றொரு பெண் குழந்தையை சத்யாஸ்ரீ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு தாய் அம்புஜகத்திற்கும் வினோதாவுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. அப்போது வினோதா கையில் வைத்திருந்த குழந்தையை வீசி எறிய, அக்குழந்தை தரையில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. தகவலறிந்த சீர்காழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு கொலை வழக்கு பதிவு செய்து வினோதாவைக் கைது செய்தனர். பெற்ற தாயே ஈவு இரக்கமின்றி  குழந்தை தரையில் வீசி கொலை செய்த சம்பவம் கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.