தொடர்புடைய செய்திகள்
- மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர் ஸ்டாலின்.. கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பு..!
- வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு..! ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல்.!!
- மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் 2ஜி வழக்கு..! ஆ.ராசா - கனிமொழிக்கு நெருக்கடி..!!
- 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு! ஆ ராசா, கனிமொழிக்கு சிக்கலா?
- சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்: கோவையில் பரபரப்பு..!
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது..! கனிமொழி உறுதி..!!
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்புமனு தாக்கல் செய்தபின் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறினார்.
