1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (07:31 IST)

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு! ஆ ராசா, கனிமொழிக்கு சிக்கலா?

2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த மேல்முறையீடு வழக்கு குறித்த தீர்ப்பு இன்று வெளிவர இருப்பதாகவும் இதனால் ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 2ஜி ஏலத்தில் முறைகேடு நடந்ததாக ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இருவரும் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில்  2 ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட உள்ளது. கனிமொழி மற்றும் ஆ ராசா ஆகியோர்கள் மீதான மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இருவருக்கும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆ ராசா நீலகிரி தொகுதியில், கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva