செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (13:05 IST)

வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு..! ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல்.!!

OPS
ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். 

முன்னதாக, மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு வைத்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

 
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.