1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (17:09 IST)

தேமுதிகவிற்கு எத்தனை சீட்.? அதிமுகவுடன் நாளை 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!!

dmdk admk
அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை சென்னையில் நாளை நடைபெறுகிறது. 
 
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  தேமுதிக மற்றும் பாமக உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
அதிமுக - தேமுதிக இடையே ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்து கூட்டணி உறுதியாகியுள்ளது. 4 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றிய பேச்சு நடந்து வருவதாகவும் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறினார். 
 
இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (09.03.24) நடைபெறுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 
 
premalatha vijayakanth
மாநிலங்களவை சீட் கேட்பது உரிமை:
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  அதிமுக, பா.ஜ.க. இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன என்று தெரிவித்துள்ளார். 
 
மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது என்றும் அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

 
மாநிலங்களவை சீட் கேட்பது எங்கள் உரிமை என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.