திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (16:11 IST)

கடலில் இறங்கி மாணவர்கள் போராட்டம்..! சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு முழக்கம்..!!

Porattam
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்கு நீதி கேட்டு மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
 
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் சிறுமியின் படுகொலையை கண்டித்து புதுச்சேரி காந்தி சிலை பின்பு உள்ள நடுக்கடலில் இரண்டு படகுகளில் பேனர்களை கட்டிய மாணவர்கள், கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். இதனால் கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.