வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (12:15 IST)

அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்: ஈபிஎஸ் வாழ்த்து..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சற்றுமுன் அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து அவரை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து வரவேற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மகள் சிம்லா முத்து சோழன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தேர்தலில்  ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran