வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: இராமநாதபுரம் , புதன், 3 ஏப்ரல் 2024 (13:22 IST)

இந்தியாவில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் நடந்தே தீரும்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு!

இராமநாதபுரம், அச்சுந்தன்வயல், உத்திரகோசமங்கை பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்ற தலைவி சசிகலா லிங்கம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் தலைமையில் நவாஸ் கனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நவாஸ்கனியை ஆதரித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
 
அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்:
 
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது.
 
தற்போது கரூர் பகுதியில் இருந்து ரூபாய் 2861 கோடி மதிப்பீட்டில் குடிநீர் முழுமையாக கிடைப்பதற்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக முக்கொம்பு பகுதியில் இருந்து முழுமையாக தண்ணீர் கிடைக்க பெற்ற நமது மாவட்டம் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக விளங்கி உள்ளது.
 
இந்தியாவில் நிட்சயமாக ஆட்சி மாற்றம் நடந்தே தீரும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் துரிதமான முறையில் செய்து பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். மகளிர் உரிமைத்தொகை முழுமையாக கிடைப்பதற்கு திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. 
 
தேர்தல் நிறைவு பெற்ற பின்பு அனைவருக்கும் வழங்கப்படும் என பேசினார்.