திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (20:34 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்..! 30 ஆயிரம் கோடி ஊழல்..! இபிஎஸ் சரமாரி புகார்.!!

Edapadi
23-ம் புலிகேசி படத்தில் வடிவேல் நடிக்கும் காட்சிபோல் மோடியை கண்ட உடன் வெள்ளை  அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்டாலின் மாற்றிவிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே எம்ஜிஆர் திடலில் நடைபெற்ற பிராச்சார பொதுக்கூட்டத்தில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக எதிர்கட்சியாக இருந்தது, இப்பொழுது மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது என்றார். திமுக கூட்டணி கட்சியினர் ஜால்ரா தட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.
 
திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலைவாசிவும் கூடி உள்ளது என குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 
 
சமீபத்தில் நடந்த புயலில் ஸ்டாலின் ஆட்டம் கண்டுவிட்டார் இந்த புயலுக்கே தாங்க மாட்டேங்கிறார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும்  திமுக அரசு மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 
பொம்மை முதல்வர் போல் இருந்தார் என விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது ஓடோடி வந்து பார்த்து உதவி செய்வதுதான் அரசு ஆனால் அதனை செய்ததா இந்த திமுக அரசு என அவர் கேள்வி எழுப்பினார்.
 
அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்து 1000-கோடி ஒதுக்கினோம் என்றும் ஆனால் கமிஷனுக்கு ஆசைபட்டு  அந்த பணிகளை எதுவும் முழுமையாக செய்யாத காரணத்தால் மழை வெள்ளத்தில் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தூத்துக்குடி மழை வெள்ளத்தில் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அரசு எந்த நடவடிக்கைவும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். மோடி உடன் முதல்வர் எடுத்துகொண்ட புகைப்படத்தை மேடையில் காண்பித்து யார் கள்ள கூட்டணி என்று இப்போது தெரிகின்றதா என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
 
EPS
உதயநிதி ஸ்டாலின் என்னை பார்த்து பல்லை காட்டுகின்றார் என்று பேசி வருகின்றார். நீ எதை காட்டுகின்றாய் என மோடியுடன் உதயநிதி இருக்கும் படத்தை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். 
 
திமுக 23-ம் புலிகேசி படத்தில் வடிவேல் நடிக்கும் காட்சிபோல் மோடியை கண்ட உடன் வெள்ளை கொடி காட்டுகின்றார் என்றும் மோடியை பார்த்த உடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்டாலின் மாற்றிவிடுவார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து பேசினார்.

 
முதல்வர் ஸ்டாலினுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்றார்.  தேர்தல் பத்திரத்தில் 656-கோடி ஊழல் செய்துள்ளது திமுக என தெரிவித்த எடப்பாடி, கடந்த இரண்டு ஆண்டுகளில்  30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது திமுக என்றும் இதற்காகதான் அடிக்கடி வெளிநாடு செல்கின்றார் முதல்வர் ஸ்டாலின் என்றும் குற்றம் சாட்டினார்.