ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (13:29 IST)

கூட்டணியை உதறிய சிரோமனி அகாலி தளம்..! தனித்துப் போட்டி என பாஜக அறிவிப்பு.!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா
மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கும் ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்துள்ளார்.
 
பாஜகவுடன் இம்முறை கூட்டணி இல்லை என சிரோமனி அகாலி தளம் கட்சி அறிவித்துவிட்ட நிலையில், பாஜகவும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.  விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பஞ்சாபில் இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு போட்டியாக பாஜகவும், அகாலி தளமும் தனித்து போட்டியிடுவதால் முக்கிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.