வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (15:40 IST)

புதுவையில் மும்முனை போட்டி.. வெற்றி பெறுவது யார்?

vaithilingam
புதுவையில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கு அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் நிலையில் அங்கு யாருக்கு வெற்றி என்பது குறித்து அந்த தொகுதி மக்களால் கணிக்க முடியாத அளவில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்  வைத்திலிங்கம் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாராயணசாமி தோல்வி அடைந்தார் என்பதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அந்த தொகுதியில் 38000 தாக்குதல் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த முறை வெற்றி பெற்ற வைத்தியலிங்கம் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து பாஜகவின் நமச்சிவாயம் என்பவர் போட்டியிடுகிறார். மேலும் அதிமுகவிலிருந்து தமிழ் வேந்தன் போட்டியிட மேனகா என்பவர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்

இந்த தொகுதியில் மூன்று கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் இருக்கும் நிலையில் வெற்றி யாருக்கு என்பது கணிக்க முடியாத அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதைய நிலையில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முன்னணியில் இருக்கிறார் என்றும் ஆனால் தேர்தல் நெருங்கும் வரை இந்த முன்னணி இருக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva