ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (14:12 IST)

தேர்தலுக்கு பின் அதிமுக எங்கள் வசமாகும்.! ஓபிஎஸ் உறுதி..!!

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தங்கள் வசமாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் வருகின்றன என்றார்
 
ராமநாதபுரம் தொகுதியில் தனக்கு வெற்றி உறுதி என்றும் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கு உள்ளார் என்று தெரியவில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 
தொடர்ந்து அவரிடம் ‘2024 தேர்தல் முடிவில் அதிமுக ஓபிஎஸ், டிடிவி தினகரன் கைக்கு வரும்’ என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக அதிமுக தங்கள் வசமாகும் என்று பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.