வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:25 IST)

மறந்திடாமல் புறக்கணிக்காமல் ஜனநாயக கடமையை ஆற்றிடுங்கள்..! முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

CM Vote
வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது  மனைவி துர்கா ஸ்டாலினுடன்  சென்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன் என்றும் அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதில் லலிதா அவர்,  நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான் என்று தெரிவித்தார்.

 
இதனிடையே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்ல ஸ்டாலின்,  அனைவரும் தவறாது வாக்களியுங்கள் என்றும் குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.