புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (17:29 IST)

தேர்தலுக்கு பத்திரிக்கை வைத்த சினேகன் – சிவகங்கையில் நூதனப் பிரச்சாரம் !

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சினேகன் மக்களுக்கு பத்திரிக்கை வைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரச்சாரம் 16 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அரசியல்வாதிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களின் மனதைக் கவர அரசியல்வாதிகள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மன்றம் சார்பில் போட்டியிடும் பாடலாசிரியர் சினேகன் மக்களுக்குப் பத்திரிக்கை தேர்தலுக்கு அழைத்துள்ளார். நாதஸ்வரம் மேளம் முழங்க மக்களுக்கு இந்த பத்திரிக்கையை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

சினேகனின் இந்த நூதனமான பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.