கண்களால் பேசியே வாக்கு சேகரிப்பேன் - கமல்ஹாசன் ’தமாஷ்’
தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருபெரும் திராவிட தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த இரு பெரும் கட்சிகளுக்குப் போட்டியாக நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் போன்றவை போட்டியிடுகின்றன.
இந்நிலையில் கடலூரில் மக்களிடையே கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்ட போது கூறியுள்ளதாவது :
தபால் வாக்குப்பதிவின் போது போலீஸார் தொப்பியை கழற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும். காவல்துறையை காவல்துறையாக செயல்பட வைப்பது தமிழக அரசின் கடமை. நான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன் என்று தெரிவித்தார்.
இவ்வாறு(கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன் ) கமல் பேசியதற்கு மற்ற கட்சியினர் தமாஷாகப் பேசி வருவதாக தகவல் வெளியாகிறது.