வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (14:21 IST)

வாக்களிக்க முடியாமல் தவிக்கும் ரோபோ சங்கர்: காரணம் என்ன?

வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த நடிகர் ரோபோ சங்கர் வாக்களிக்க முடியாமல்  திரும்பிச் சென்றார்.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது 1 மணி நிலவரப்படி 38 மக்களைவை தொகுதிகளில் 39.49 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 1 மணி நிலவரப்படி 42.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில்  காலை 6.30 மணிக்கே வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டபோதும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். இதனால் அவர் நீண்ட நேரம் காத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் சென்றார். ஆனால் மாலைக்குள் எப்படியாவது ஓட்டு போட்டே தீருவேன் என கூறியுள்ளார்.