1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
  4. Vote percentage upto one o clock

1 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் என்ன? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!

தேர்தல்
தமிழகத்தில் மதியம்  1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில்  13.48 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகயிருந்தது. 11 மணியளவில் 30.6 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது.
 
இதைத்தொடர்ந்து தற்போது 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 1 மணி நிலவரப்படி 42.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கண்கலங்கியபடி வாக்களித்த ஏ சி சண்முகம் – பின்னணியில் வேலூர் தேர்தல் ரத்தா !