செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (09:45 IST)

மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியா? பரபரப்பு தகவல்கள்

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அவர் வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறார். மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் பிரியங்கா காந்திக்கு உபி மக்களின் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரேபரேலி தொகுதிக்கு அவர் பிரச்சாரம் செய்ய சென்றபோது, பிரியங்கா காந்தி ரேபேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கு பதில் அளித்த பிரியங்கா, இங்கு ஏன் போட்டியிட வேண்டும், மோடி போட்டியிடும் வாரணாசியில் போட்டியிட்டால் என்னை பெற செய்ய மாட்டீர்களா? என்று கேட்டார். கட்சி தலைமை அனுமதித்தால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
 
வாரணாசியில் மோடியின் வெற்றி உறுதி என்ற நினைப்பில் அவரை இந்தியாவின் பல பகுதிகளுக்கு பாஜகவினர் பிரச்சாரத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் மோடியை வாரணாசிக்குள்ளேயே முடக்கிவிடலாம் என்பதுதான் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஏதாவது அதிசயம் நடந்து பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுவிட்டால், பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலும் மோடி பிரதமராக முடியாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.,