ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (14:12 IST)

பதறவைக்கும் இலங்கை தாக்குதல்: மோடியின் அதிரடி டுவீட்

பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் மக்கள் 100க் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை மக்களுக்கு பக்க பலமாக இந்தியா துணை நிற்கும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த ஆறுதல்கள், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.