1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
  4. Whether Modi become PM, what Rajini says?

மீண்டும் மோடி பிரதமராக வருவாரா? ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினி
மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதிலளித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில்  தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் மோடி அடுத்ததாக பிரதமராக வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. மே 23 வரை பொறுத்திருங்கள் தெரிந்துவிடும் என ரஜினி பதிலளித்தார். மேலும் ரசிகர்களை ஏமாற்றாமல் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
கனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி