இதுக்குமேல வைகோவை யாராலும் கழுவி ஊத்த முடியாது: அழகிரி மகன் செய்த வேலை!!!

vaiko
Last Updated: புதன், 20 மார்ச் 2019 (12:42 IST)
அழகிரி மகன் தயா அழகிரி வைகோவை கடுமையாக விமர்சித்திருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரியின் மகனும் கருணாநிதியின் பேரனுமான தயா அழகிரி அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் தலைவர்கள் பற்றி பரபரப்பான கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியை காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுகவை திமுகவுடன் இணைத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை எனப் பதிவிட்டிருக்கிறார். அதன் கீழ் #Vaiko, ஒரு வீடு, அம்புக்குறி, ஆமை ஆகிய குறியீடுகள் உள்ளது. வைகோவை கிண்டலடிக்கவே ஆமை புகுந்த வீடு என அழகிரி பதிவிட்டுள்ளார்.
 
 

 
 
 


இதில் மேலும் படிக்கவும் :