தொகுதி ஒதுக்கியாச்சு; வேலையை ஆரம்பித்த தயாநிதி!!

Last Updated: திங்கள், 18 மார்ச் 2019 (21:24 IST)
நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கு வேட்பாளர்களை திமுக அறிவித்துவிட்டது. விரைவில் பிரச்சாரத்தையும் துவங்க இருக்கிறது. 
திமுக போட்டியிடும் மத்திய சென்னையின் வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறன் தனது தேர்தல் வேலைகளை துவங்கியுள்ளார். இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்திற்கு சென்று வைகோவிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
 
இதன் பின்னர் வைகோ கூறியது பின்வருமாறு, 40 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். 
20 ஆம் தேதி திருவாரூரில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமது பிரச்சாரத்தை தொடங்குகிறார். நான் தூத்துக்குடியில் இருந்து பிரச்சாரம் துவங்குகிறேன். கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து எனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன்.
 
இந்த தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். சனாதன கோட்பாடுகள், சனாதன முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :