தொடர்புடைய செய்திகள்
- அஸ்ஸாம் மாநில ராணுவ முகாமில்... தமிழக ராணுவ வீரர் தற்கொலை !
- காதலில் விழுந்தேனா? சர்சையை கலைத்த கம் பேக் நடிகை!
- ஹோம்லியான சுனைனாவை பார்த்து போர் அடித்துவிட்டதா....? இப்போ பாருங்க!
- ஐதராபாத், உன்னாவ் தொடர்ந்து மீண்டும் ஒரு பெண் எரித்து கொலை:
- துப்பாக்கியை காட்டி மிரட்டிய காங்.,வேட்பாளர் : வாக்குச்சாவடியில் பரபரப்பு
யோகி பாபுவுடன் த்ரில்லிங் "ட்ரிப்" அடித்த சுனைனா - பயங்கரமான ஃபர்ஸ்ட் லுக்!
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திரில்லர் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வரும் ட்ரிப் படத்தில் யோகிபாபு மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
Happy to release the First Look poster of #Trip . Best wishes team @Studios_sai @iyogibabu @Music_Siddhu @Thesunainaa #karunagaran @praveenSurviver @dennisfilmzone @gushankar84 @deepakdft @nivethajoseph @kallorivino@awesomlefty @vjsiddhu2@vjrakeshkm pic.twitter.com/4qLEJU8d5e
— G.V.Prakash Kumar (@gvprakash) January 4, 2020
