செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:50 IST)

காதலில் விழுந்தேனா? சர்சையை கலைத்த கம் பேக் நடிகை!

நடிகை சுனைனா தனது காதல் மற்றும் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். 
 
காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனா. மாசிலாமணி, வம்சம், சமர், தெறி, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் எனை நோக்கி பாயும் தோட்டா, தற்போது சில்லுகருப்பட்டி ஆகிய படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 
 
அப்போது உங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதா ஏன் எங்களுக்கு சொல்லவில்லை என ரசிகர்கள் கேட்க, எனக்கு திருமணமாகவில்லை. எனக்கு யார் மீதும் காதலும் இல்லை. இது வெறும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.