திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (22:57 IST)

9 வாரத்தில் 7.8 கோடி வசூல் வெற்றி, 2 வாரத்தில் 8 கோடி வசூல் ஆவரேஜ்! எப்படி சாத்தியம்

பிரபல ஆங்கில சினிமா இணையதளம் ஒன்று ஆரம்பத்தில் இருந்தே அஜித்தின் விவேகம் திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வழங்கி வருவதோடு, படத்திற்கு எதிரான பணியை செய்து வருவதாக அஜித் ரசிகர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது வாரம் குறித்த வசூல் தகவலை வெளியிட்டுள்ள அந்த இணையதளம், 'விவேகம்' திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ.8 கோடி வசூல் செய்து ஆவரேஜ் படம் என்ற நிலையை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
 
ஆனால் இதே இணையதளம் விஜய்யின் 'கத்தி' 9 வாரத்தில் ரூ.7.8 கோடி வசூல் செய்ததை சூப்பர் ஹிட் வெற்றி என்றும், 10 வாரத்தில் ரூ.10 கோடி வசூல் செய்ததை வெற்றி என்றும், 3 வாரத்தில் 6.1 கோடி வசூல் செய்ததை சராசரிக்கும் மேல் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. 9 வாரத்தில் 7.8 கோடி வசூலித்த படம் வெற்றி என்றால் 2 வாரத்தில் 8 கோடி வசூல் செய்த படம் எப்படி ஆவரேஜ் ஆனது என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்,.