புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (19:34 IST)

டோலிவுட் டு பாலிவுட்: அஜித்-சிவா கூட்டணி!!

அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வெளியான வீரம் படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.


 
 
நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார். இந்நிலையில், வீரம் படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
 
தெலுங்கு நடிகர் பவண் கல்யாண் தெலுங்கு ரீமேக்கில் அஜித் வேடத்தில் நடித்தார். டோலிவுட்டிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அஜித் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய குமார் நடிக்கவுள்ளதாகவும், படத்திற்கு Land Of Lungi என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.