1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (07:11 IST)

'விவேகம்' படத்தை அடுத்து ரிலீஸ் ஆகும் 13 படங்கள்

தல அஜித் நடித்த விவேகம் திரைப்படம் கடந்த 24ஆம் தேதி ரிலீஸ் ஆனதன் காரணமாக ரிலீசுக்கு முந்தைய வாரமும், ரிலீஸ் நாளிலும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை



 
 
இந்த நிலையில் இன்று மூன்று தமிழ் படங்கள் உள்பட 13 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்', 'விதார்த், பாரதிராஜா நடித்த 'குரங்கு பொம்மை', மற்றும் ஒரு கனவு போல ஆகிய தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
 
இருப்பினும் விவேகம் திரைப்படம் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நல்ல வசூல் செய்து கொண்டிருப்பதால் இந்த திரைப்படங்களுக்கு மெயின் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.