1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actor Ajith Kumar's Busy Racing Schedule Puts AK64 on Hold; Adhik Ravichandran May Move to Next Project

விஜய் படம் மட்டுமல்ல, இனி அஜித் படமும் வராது.. ரசிகர்களை சோகமாக்கிய புதிய தகவல்..!

vijay ajith
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், 2026-ஆம் ஆண்டு மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை கார் பந்தயங்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதால், அவரது அடுத்தடுத்த திரைப்பட பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதன்படி, கடந்த மாதமே படப்பிடிப்பு தொடங்க வேண்டிய 'ஏகே 64' திரைப்படம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால், அஜித்தின் அடுத்த படம் திரைக்கு வர கூடுதல் காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்கிடையில், அஜித்தின் படத்திற்காக காத்திருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது அடுத்த கட்ட பணிகளுக்கு நகத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 'மார்க் ஆண்டனி 2' அல்லது நடிகர் கார்த்தியுடன் ஒரு புதிய படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
அஜித்தின் ரேஸ் அட்டவணை காரணமாக, அவரது சினிமா ரசிகர்கள் புதிய பட அறிவிப்புகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதேசமயம், அஜித்தின் கார் பந்தய ஆர்வம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய், திரையுலகை விட்டு விலகி அரசியலில் குதித்துள்ள நிலையில், அஜித்தும் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகி ரேஸ் துறைக்கு சென்று விட்டதாகவே கருதப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
புது ஆட்களை ஏன் வளர்த்து விடுறீங்க? விவேக்கிடம் கேட்ட வடிவேலு... வைரலாகும் கொட்டாச்சியின் பேட்டி!