ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (18:21 IST)

ருசி கண்ட தயாரிப்பாளர்… காரித் துப்பும் இயக்குநர்கள்

இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய படத்தால் எக்கச்சக்கமாக பணம் பார்த்த தயாரிப்பாளர் அதே மாதிரியான கதைகளாகக் கேட்கிறாராம்.


 

 
இரண்டு முன்னணி நடிகைகளின் பெயர்களை தலைப்பாகக் கொண்டு, ஏகப்பட்ட ‘ஏ’ விஷயங்களுடன் வெளியான படம் அது. இசையமைப்பாளர் ஒருவர் ஹீரோவாக நடித்த அந்தப் படத்தைக் கழுவி ஊற்றாதவர்கள் இல்லை. ஆனால், அந்தப் படத்தின் வசூலும் பலமாக இருந்தது.
 
எனவே, மறுபடியும் அதேபோன்ற ஒரு படத்தைத் தயாரிக்கலாம் என நினைத்துள்ளாராம் பசுமையை நிறுவனத்தின் பெயரில் கொண்ட இரண்டெழுத்து இனிஷியல் தயாரிப்பாளர். எனவே, தன்னிடம் கதைசொல்ல வரும் அறிமுக இயக்குநர்களிடம், அதுமாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கிறாராம். இதைக்கேட்ட இயக்குநர்கள், ஆபீஸ் வாசலில் காரித்துப்பிவிட்டு திரும்பி விடுகிறார்களாம்.