வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (23:58 IST)

அதிகரித்து வரும் பெய்டு டுவிட்டர்கள்: தயாரிப்பாளர்கள் புலம்பல்

உங்களுக்கு ஒரு டுவிட்டர் அக்கவுண்ட் இருக்கின்றதா? அதில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கின்றார்களா? கொஞ்சம் கிண்டல் கேலி செய்ய தெரியுமா? இதுபோதும் உங்களுக்கு மாதம் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துவிடும். 



 
 
ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தின் குழுவினர்கள் எவ்வளவு டென்ஷனாக இருப்பார்கள் என்பது பலருக்கு தெரியாது. ஏன் டென்ஷன் என்றால் படத்தின் ரிசல்ட் குறித்து ரசிகர்கள் என்ன சொல்வார்களோ என்பது அல்ல, விமர்சனம் என்ற பெயரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு அக்குவேறு ஆணி வேறாக பிய்த்து விமர்சனம் செய்பவர்கள் குறித்துதான்
 
இதில் பெய்டு டுவிட்டர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களை 'சரியான' முறையில் கவனித்தால் மொக்கை படத்தை கூட சூப்பர் படம் என்று விமர்சனம் சொல்வார்கள், பணம் கொடுக்காவிட்டால் நல்ல படத்தை கூட பிளாப் என்று கதை கட்டிவிடுவார்கள். தற்போது தமிழ் திரையுலகில் பெய்டு டுவிட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாகவும் இவர்களுக்கு பணம் கொடுக்கவே ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டில் இணைக்க வேண்டியதிருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். எப்படி எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்கப்பா.