ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (06:59 IST)

பாஜகவில் இணைந்த ரஜினி பட தயாரிப்பாளர்

கடந்த சில வருடங்களாகவே தேசிய கட்சியான பாஜகவில் திரையுலக பிரபலங்கள் அதிகம் இணைந்து வருகின்றனர். கங்கை அமரன், எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம் உள்பட பல திரையுலக பிரபலங்கள் சமீபகாலங்களில் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது தெரிந்ததே.



 
 
இந்த நிலைய்யில் ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் சுதந்திரப் போராட்டத் தியாகி மணலி கந்தசாமி பிள்ளையின்  வளர்ப்பு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜகவில் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி கூறியபோது, 'பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதன் காரணமாக என்னை பா.ஜ.க-வில் இணைத்து கொண்டேன். இந்த நல்லாட்சி சாதனைகள் மக்களுக்குச் சென்றடைய உழைப்பேன்'' என்று தெரிவித்தார்.
 
மேலும் அமித்ஷா சென்னை வருகையின்போது அவரது முன்னிலையில் மேலும் சில திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.