வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (19:34 IST)

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்
1999 ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம்தான் காதலர் தினம். இந்தப் படம் வெளியானதில் இருந்து ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் டிவியில் இந்தப் படத்தைத்தான் ஒளிப்பரப்பு செய்வார்கள். இப்போது வரை இந்தப் படம் தான் காதலர் தின ஸ்பெஷலாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்தப் படத்தின் மூலம் தான் குணால் ஹீரோவாக அறிமுகமானார். இவருக்கு பிறகு அந்த ஹேர் ஸ்டைல் ஃபேமஸ் ஆனது.
 
அதிலிருந்தே கல்லூரி மாணவர்களும் குணால் ஹேர் ஸ்டைலை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். ஹீரோயின் சோனாலி பிந்த்ரேவும் தமிழில் அறிமுகமான படமும் இதுதான். இந்தப் படம் இப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்  ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக மௌனம் பேசியதே படத்தையும் ரீ ரிலீஸ் செய்தனர்.
 
இரண்டு படங்களுக்கும் மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 90ஸ் இளைஞர்களை பெரிதும் தாக்கிய படமாகத்தான் காதலர் தினம் படம் அமைந்தது. அதுவரை இண்டெர்னெட் என்றே தெரியாமல் இருந்த மக்களுக்கு இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்பதையும் புரிய வைத்த படம்தான் காதலர் தினம். மேலும் இப்பொழுது மாதிரி சாட்டிங், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என எதுவுமே இல்லாத காலம் அது.
 
அதனால் காதலர்கள் ஒரு கம்ப்யூட்டர் செண்டருக்கு சென்று அங்கிருந்து தன் காதலை வளர்த்துக் கொள்வார்கள். அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். அதை காதலர் தினம் படத்தில் அற்புதமாக காட்டியிருப்பார்கள். இந்த நிலையில் படத்தின் ஹீரோவை தேடிக் கொண்டிருந்த நேரத்தில்தான் மும்பை சென்றிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். குணால் ஒரு கோல்ஃப் பிளேயராம். ஹீரோ யாரும் கிடைக்கவில்லை என்றால் அஜித்தை வைத்துதான் இந்தப் படத்தை எடுத்திருப்போம்.
 
ஆனால் கதையில் கொஞ்சம் மாற்றத்தையும் கொண்டு வந்திருப்போம். ஆனால் குணால் ஹீரோவானார் என்று தயாரிப்பாளர் கூரியிருக்கிறார்.