1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (22:46 IST)

மீண்டும் விஜய்யுடன் இணையும் தேனாண்டாள் பிலிம்ஸ்? இயக்குனர் யார் தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம். இந்த படத்தில் நடிக்கும்போது விஜய்க்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளதாம்



 
 
இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை எந்தவித சிறு பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்டபடி மிக நேர்த்தியாக யாருடைய மனம் கோணாமல் தயாரித்து வந்த தயாரிப்பாளரை பார்த்து உண்மையில் விஜய் ஆச்சரியப்பட்டாராம். 
 
பொதுவாக விஜய் படம் ரிலீஸ் என்றாலே கடைசி நேரத்தில் யாராவது திடீரென பிரச்சனை செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு என்றதும் அவர் மீதுள்ள மரியாதை காரணமாக இதுவரை எந்த பிரச்சனையும் எழவில்லை. இனிமேலும் பிரச்சனை இருக்காது என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இதே நிறுவனத்திற்கு இன்னொரு படம் நடித்து கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், விஜய் 63 படத்தை அனேகமாக தேனாண்டாள் நிறுவனமே தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் யார் என்பதை கேட்டால் ஆச்சரியமாக இருக்குமாம். கண்டிப்பாக அட்லி கிடையாது. சமீபத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த ஒரு பிரபல இயக்குனரின் உதவி இயக்குனர் தான் 'விஜய் 63' படத்தின் இயக்குனராம். யார் என்பதை யூகித்து பாருங்கள்