1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India Seals 22-Run Win Against New Zealand to Clinch ODI Series

5வது ஒருநாள் போட்டி.. இந்தியா அபார வெற்றி.. சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூசிலாந்து...

இந்திய அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது. 
 
மவுண்ட் மாங்குனுவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும், மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேல் தலா 46 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் இந்திய அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
அடுத்து 210 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியை, இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு 187 ரன்களுக்குச் சுருட்டினர். அதிகபட்சமாக டீன் பாக்ஸ்கிராப்ட் 31 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி இலக்கைத் எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
15 வயதில் கேப்டனாகி சாதனை.. புதிய உலக சாதனையை படைத்த வைபவ் சூர்யவன்ஷி...