தொடர்புடைய செய்திகள்
- ஓட்டு போட வரும்போது காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வந்த அண்ணாமலை.. ஏதேனும் குறியீடா?
- விசில் புரட்சி வீணாப்போச்சே!.. காலையிலயே போய் ஓட்டு போடுங்க!.. விஜய் சொன்னது நடக்கலயே!..
- இரட்டைக் கொலை எதிரொலி!.. தேர்தலை புறக்கணித்த நாங்குநேரி கிராம மக்கள் ...
- தமிழக சட்டசபை தேர்தல்!. 11 மணி வரை 37.56 சதவீத வாக்குப்பதிவு...
- அடையாள அட்டை இல்லாமல் வாக்கு செலுத்துவதா? தமிழிசை - திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்..!
விசிலுக்கு வாக்களித்துவிட்டு வெளியே வந்தவரை கைது செய்த போலீஸ்.. என்ன தப்பு செய்தார்?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த சக்திவேல் என்பவர், தான் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.
வாக்குப்பதிவின் ரகசியத்தன்மையை பேணுவதற்காக, வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும் தேர்தல் ஆணையம் கடும் தடை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 128-ன் கீழ், வாக்களிப்பதை வீடியோ எடுப்பது குற்றமாகும். விதியை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சக்திவேல் வீடியோ பதிவிட்டதை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த தேர்தல் ஆணையம், காவல்துறை மூலம் அவரை அதிரடியாக கைது செய்துள்ளது. ஜனநாயக திருவிழாவில் ஆர்வ மிகுதியால் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரியது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மற்ற வாக்காளர்கள் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Edited by Siva
