புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (10:42 IST)

ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன்.. சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியா? எப்போது ரிலீஸ்?

ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன்.. சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியா? எப்போது ரிலீஸ்?
ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ஏற்கனவே மடிக்கக்கூடிய போன்களை அறிமுகம் செய்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் 'ஃபோல்டபிள் ஐபோன்' தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு, ஆப்பிள் தனது தனித்துவமான வடிவமைப்பில் மடிக்கக்கூடிய திரையை உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஆப்பிள் நிறுவனம் தனது திரையின் தரத்தில் சமரசம் செய்யாமல், மடிப்புகள் தெரியாத வகையிலான நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மோட்டோரோலா ரேசர் போன்ற மாடலின் வடிவமைப்பில் இந்த ஐபோன் வெளிவர வாய்ப்புள்ளது. 
 
மற்ற நிறுவனங்கள் ஏற்கனவே பல மடிக்கக்கூடிய போன்களை வெளியிட்டுவிட்டாலும், ஆப்பிள் மெதுவாக ஆனால் மிகவும் நேர்த்தியான மற்றும் உறுதியான ஒரு தயாரிப்பை கொண்டு வர காத்திருக்கிறது. 2026 அல்லது 2027-க்குள் இந்த தொழில்நுட்பம் சந்தைக்கு வரும் என தெரிகிறது. இது ஐபோன் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva