1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Motorola Razr Ultra 2026 Leaked in Promo Video Ahead of April 29 Launch: Premium Design Revealed

மோட்டோரோலா Razr Ultra Foldable ஸ்மார்ட்போன்.. ஏப்ரல் 29ஆம் தேதி அறிமுகம்.. OLED திரை மற்றும் AI கேமரா..

மோட்டோரோலா
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய Foldable ஸ்மார்ட்போனான Razr Ultra 2026-ஐ வரும் ஏப்ரல் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. 
 
இந்த போன் மிகவும் நேர்த்தியான பிரீமியம் தோற்றத்தை கொண்டுள்ளது. இதில் Vegan Leather மற்றும் மர வேலைப்பாடுகள் போன்ற அமைப்பை கொண்ட இரண்டு விதமான மாடல்கள் வரவுள்ளன. 
 
மேம்படுத்தப்பட்ட Hinge அமைப்பு மற்றும் மெலிதான உலோக சட்டங்கள் இதற்கு ஒரு ஆடம்பர தோற்றத்தை தருகின்றன. மேலும், இதில் ஸ்னாப்டிராகன் ரக அதிவேக சிப்செட், OLED திரை மற்றும் மேம்பட்ட AI கேமரா தொழில்நுட்பங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
 
இந்த ஸ்மார்ட்போன் விலை சற்று அதிகமாக இருக்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் இதன் ஆரம்ப விலை சுமார் சுமார் ரூ.1.25 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம். இந்தியாவில் இது அறிமுகமாகும் போது ரூ.1.2 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் போன்ற போன்களுக்கு இது ஒரு கடும் போட்டியாக அமையும்.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!.. பாலியல் மாத்திரை போட்ட வாலிபர் மரணம்!...