தொடர்புடைய செய்திகள்
- நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.
- இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை.. நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!..
- சீனாவிடமிருந்து வெளியேறி Hisense TV நிறுவனத்துடன் இணையும் LG..
- ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2026 மாநாடு: புதிய Siri மற்றும் iOS 27 எதிர்பார்ப்புகள்
- நாளை மறுநாள் வெளியாகும் OnePlus Pad 4.. விலை ரூ.59,999.. என்னென்ன சிறப்பம்சங்கள்?
Samsung Galaxy M47 5G.. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிப்பு...!
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள சாம்சங் நிறுவனம், தனது அடுத்த அதிரடி தயாரிப்பான Samsung Galaxy M47 5G மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. Next Level Monster என்ற மிரட்டலான அடைமொழியுடன் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஜூன் 29 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரவுள்ளது. அதிகப்படியான பயன்பாடுகளையும் தாங்கக்கூடிய அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகளைப் பொறுத்தவரை, கேமிங் மற்றும் அதிவேக செயல்பாடுகளுக்கு ஏற்ற சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மல்டிடாஸ்கிங் பணிகளை மிக எளிதாகச் செய்வதற்கு ஏதுவாக அதிவேக எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 5G பிரியர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களை அமேசான் தளத்தின் பிரத்தியேகப் பக்கத்தில் பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.
Edited by Siva
