வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (09:29 IST)

எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! - வாய் பிளந்த ரசிகர்கள்!

Naevis

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் பெரும் பாய்ச்சலாக ஒரு கே-பாப் (K-Pop) பெண் பாடகரையே ஏஐ மூலம் உருவாக்கியுள்ளது தென்கொரிய நிறுவனம் ஒன்று.

 

 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பல துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவர் முகத்தை மற்றொருவர் முகமாக மாற்றுவது போன்றவை திரைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் செய்தி வாசிப்பாளர் போன்ற நபர்களுக்கும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 

 

அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த SM Entertainment என்ற நிறுவனம் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேவிஸ் (Naevis) என்ற கே-பாப் பெண் பாடகியை உருவாக்கியுள்ளது. இந்த நேவிஸ் தற்போது “Done” என்ற ஆல்பம் பாடலில் பாடி, டான்ஸ் ஆடி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதை தொடர்ந்து நேவிஸ் படங்கள், கேம்களிலும் இடம்பெற உள்ளதாகவும், நேவிஸ் பெயரில் பல பொருட்களும் தயாரித்து விற்கப்பட உள்ளதாகவும் அதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பார்க்க நிஜ பெண் போலவே இருக்கும் நேவிஸ் அடுத்தடுத்து திரைப்படத்திலும் இடம்பெற உள்ள நிலையில் தென்கொரியாவில் நேவிஸ் என்ற இந்த எந்திர லோகத்து சுந்தரிக்கும் ரசிகர்களும் அதிகரித்துள்ளனராம்.

 

Edit by Prasanth.K