வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (12:50 IST)

பிளே ஸ்டோரில் ஏற்பட்ட பிரச்சனை: கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்க்க ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

டிரெண்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு, பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை கண்டறிந்துள்ளனர். இது பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவை வழக்கமாக தோன்றும் விளம்பரங்களை போன்றில்லாமல் இவற்றில் பின்பற்றப்படும் வழிமுறைகளால் விளம்பரங்களை குளோஸ் செய்வது கடினமாகும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளை நீக்க அறிவித்துள்ளது. ஆர்ட்வேர் நிறைந்ததாக கூறப்படும் செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன எனவும், இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா உள்ளிட்ட செயலிகள் அறியப்படுகின்றன எனவும் டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.