இங்கிருந்த ரோட்ட காணும் சார்.. படிகட்டில் ஆடி காரை இறக்கிய ஊபர் டிரைவர்!

Last Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:32 IST)
ஊபர் டிரைவர் ஒருவர் படிகட்டில் ஆடி காரை இறக்கி பயணம் மேற்கொண்டது வீடியோவாக வரலாகி வருகிறது. 
 
கூகுள் மேப் வந்த பிறகு தெரியாத வழியில் கூட செல்ல மிகவும் உதவியாக இருக்கிறது. சில சமயங்களில் வில்லங்கமாகவும் அது முடிகிறது. தற்போது உள்ள காலக்கட்டத்தில் கேப் டிரைவர்கள் நம்புவது கூகுள் மேப் ரூட்டைத்தான். 
 
அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் போண்டி நகரில் ஊபர் கேப் டிரைவர் ஒருவர் சரியான வழியில்தான் செல்கிறொம்ம் என எண்ணி  படிக்கட்டுகளில் ஆடி காரை ஓடவிட்ட சம்பவம் நடந்துள்ளது. 
 
இது குறித்து அந்த டிரைவர் கூறியதாவது, அது வழி என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் அந்த இடத்தில் படிக்கட்டுகள் இருந்ததை பார்த்ததும், காரை உடனடியாக திருப்ப முடியவில்லை. எனவே படிக்கட்டில் காரை ஓட்டினேன் என தெரிவித்துள்ளார். 
 
இதோ அந்த வீடியோ... 


இதில் மேலும் படிக்கவும் :