திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:34 IST)

"மோடியை ஓரங்கட்டிய சன்னி லியோன்" ரசிகர்களின் தீவிர தேடலின் பிரதிபலிப்பு!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற சன்னி பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.


 
ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் சன்னி லியோனிக்கு  தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை உள்ளது. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கூகுள் தேடலில்   சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சல்மான் கான், ஷாரூக் கான் ஏன்  பிரதமர் நரேந்திர மோடி  உள்ளிட்டோரை விட சன்னி லியோனைத்தான் கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர். இதில் பெரும்பாலானோர்  சன்னி  லியோன் சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் அவரது வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் விரும்பி பார்த்துள்ளனர்.
 
இதுபற்றி நடிகை சன்னி லியோனிடம் கேட்ட போது, தன்னுடைய ரசிகர்கள் தான் இவ்வளவு பெருமைக்கு காரணம் என்றும் இது தனக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, இதே போல் கடந்த ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் சன்னி  லியோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.