செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (17:32 IST)

4ஜி போனை விட குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்!? – பிரபல நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை துவங்கப்பட உள்ள நிலையில் குறைந்த விலையில் 5ஜி போனை வெளியிட பிரபல நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் 4ஜி லெவலை எட்டியிருக்க அடுத்து 5ஜி தொழில்நுட்பத்திற்காக இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதலில் 4ஜியை அறிமுகப்படுத்தி தடம் பதித்த ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வருடாந்திர கூட்டத்தில் 5ஜி சேவை தொடக்கம் மற்றும் 5ஜி போன் அறிமுகம் குறித்த திட்டங்களை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பிரபல செல்போன் நிறுவனமான ரியல்மி இந்தியாவில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.7,000 அடக்க விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன் மாடல், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.