தொடர்புடைய செய்திகள்
- ஹாட்ஸ்டார் மூலமாக இந்தியா வரும் டிஸ்னி ப்ளஸ்: சூப்பர்ஹீரோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
- ஜியோ பிளானை ஓரம்கட்டிய வோடபோன்: 6 மாத வேலிடிட்டியுடன் தினம் 1.5 ஜிபி டேட்டா!
- 130 ரூபாய்க்கு 200 சேனல்கள் கட்டாயம்! – ட்ராய் புதிய அறிவிப்பு!
- இந்தியாவுக்கே போங்கு காட்டிய சீன வலைதளங்கள்! – வரி ஏய்ப்பு அம்பலம்!
- லொக்கேஷனை ஆஃப் செய்தாலும் கண்டுபிடிப்போம்! – தொடரும் ஃபேஸ்புக் சர்ச்சை!
எவ்ளோ நேரம் பேசினாலும் கம்பெனி கொடுக்கும் கூகுள் மீனா: புதிய அறிமுகம்!
சிரி, அலெக்ஸா போன்ற ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் போல கூகுள் நிறுவனமும் மீனா என்ற புதிய போட்-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்கள்.
மனிதன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஏஐ (AI – Artificial Intelligence) தொழில்நுட்பம் சமீப காலத்தில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அமேசானின் அலெக்ஸா போன்ற போட்-கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் உரையாடுவதுமாக இருப்பதால் இதற்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகி உள்ளனர்.
அலெக்ஸா போல உலகம் முழுவதிலும் மிட்ஸுகு, க்ளெவர்போட் போன்ற பல ஏ.ஐ போட்-கள் உள்ளன. இந்நிலையில் அவற்றை விட மிகவும் நுட்பமான திறன் கொண்ட மனிதர்கள் கேட்பதை மிக துல்லியமாக புரிந்துக் கொள்ளக்கூடிய போட் ஒன்றை கூகிள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. மீனா எனப்படும் இந்த ஏ.ஐ மற்ற போட்-களை விட மனிதர்கள் பேசுவதை மிக துல்லியமாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் என்று கூறப்படுகிறது.
ஒரு மனிதர் பேசுவதை மற்றொரு மனிதர் புரிந்து கொண்டு பதில் சொல்வது 86% என்றால் மீனாவின் துல்லியம் 79% ஆகும். இதனால் மீனாவோடு பேசுவது ஒரு எந்திரத்தோடு பேசுவது போல அல்லாமல் உண்மையான பெண்ணோடு பேசுவது போலவே இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற போட்கள் இதைவிட மிகவும் குறைவான துல்லிய திறன் பெற்றவை. கூகுளின் இந்த புதிய ஏ.ஐ போட்-க்காக பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
