1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (17:13 IST)

ஜியோ பிளானை ஓரம்கட்டிய வோடபோன்: 6 மாத வேலிடிட்டியுடன் தினம் 1.5 ஜிபி டேட்டா!

தற்போது மொபைல் நெட்வொர்க்குகளுக்கான ரீசார்ஜ் விலை அதிகரித்திருக்கும் நிலையில் குறைவான விலைக்கு அதிக நாட்கள் இணைய சேவை வழங்கும் புதிய பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது வோடஃபோன்.

சமீபத்தில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்வதற்கான தொகையை அதிகரித்தன. அதன்படி ஜியோ 555 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வீதம் 84 நாளைக்கு வழங்குகிறது. வோடஃபோன் இதே திட்டத்தை 599 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க வோடஃபோன் புதிய டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது. அந்த புதிய திட்டத்தின் கீழ் 998 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி டேட்டா விகிதம் 180 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் 180 நாட்களுக்கு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவையும் இலவசம் என கூறப்பட்டுள்ளது.

ஜியோவின் 555 ரூபாய் பிளானை விட விலை குறைவாகவும் அதே அளவு டேட்டா பிளானை அதிகநாள் வழங்கக்கூடியதாகவும் வோடஃபோனின் இந்த புதிய பிளான் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரை ஈர்க்க முடியும் என வோடஃபோன் திட்டமிட்டுள்ளது. மாதம்தோறும் ரீசார்ஜ் செய்யாமல் பல நாட்களுக்கு ஒரே முறையில் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த திட்டத்தை விரும்புவார்கள் என கூறப்படுகிறது.