வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (19:19 IST)

லொக்கேஷனை ஆஃப் செய்தாலும் கண்டுபிடிப்போம்! – தொடரும் ஃபேஸ்புக் சர்ச்சை!

பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனமே தனியாருக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மேலும் அதிர்ச்சிக்குரிய மற்றுமொறு தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும் ஃபேஸ்புக் செயலியின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் தங்கள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் தனியார் ஆய்வு நிறுவனங்களுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பேஸ்புக்கின் மற்றொறு செயலியான வாட்ஸப்பிலும் இதுபோன்ற பயனாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஃபேஸ்புக் செயலியில் இருப்பிடத்தை கண்டறியும் லொக்கேஷன் ஆப்சனை ஆஃப் செய்தாலும் கூட இருப்பிடத்தை கண்டறிய முடியும் என ஃபேஸ்புக் துணை தலைவர் கூறியுள்ளார். அமெரிக்க செனட் சபையின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் பேஸ்புக் அமைப்பில் லொகேஷனை ஆஃப் செய்தாலும், பண பரிவர்த்தனைகள், விளம்பரங்கள் மற்றும் ஐபி மூலமாக பயனாளர்கள் இருக்கும் இடத்தை அறிய முடியலாம் என அவர் தெரிவித்துள்ளார்.