நாள் ஒன்றிற்கு 4 ஜிபி டேட்டா; சலுகையில் ஜியோவை மிஞ்சும் ஏர்டெல்....


Sugapriya Prakash| Last Modified திங்கள், 25 செப்டம்பர் 2017 (14:53 IST)
இலவச சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசம் இழுத்த ஜியோவிடம் இருந்து தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ள ஏர்டெல் பல அதிரடி சலுகைகளை வழங்கிவருகிறது.

 
 
அந்த வகையில் தற்போது ஜியோவை மிஞ்சும் வகையில் நாள் ஒன்றிற்கு 4 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரூ.999/- மதிப்புள்ள இந்த திட்டதில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் நாள் ஒன்றிற்கு 4 ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி தரவு கிடைக்கும்.
 
அதன் படி ஒரு மாதம் மொத்தம் 112 ஜிபி தரவு தரும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
 
இந்த புதிய திட்டம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :