வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:12 IST)

வோடபோன் ரோம் ஃபிரீ: அடுத்த புதிய அதிரடி சலுகை!!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகைக்கு ஐ ரோம் ஃபிரீ (i-Roam FREE) என பெயரிட்டுள்ளது.


 

 
 
இந்த சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா மற்றும் மற்ற சேவைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். 
 
ஆனால், இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்ய நாள் ஒன்றிற்கு ரூ.180 வீதம் 28 நாட்களுக்கு ரூ.5,000 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளது.
 
மேலும், 24 மணி நேர வேலிடிட்டி கொண்ட சலுகையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ.500 செலுத்தலாம். இந்த சலுகை 18 நாடுகளில் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.

இந்த சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் மை வோடபோன் செயலி அல்லது வலைத்தளம் மூலமாகவும் ஆக்டிவேட் செய்யலாம்.