திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (15:02 IST)

25 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஜியோ!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சியோமி, அசுஸ் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது இன்டெக்ஸ் நிறுவனத்துடனும் இணைந்துள்ளது.


 
 
இன்டெக்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து உள்ளதால், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 25 ஜிபி கூடுதல் டேட்டா வழங்க இருக்கிறது. 
 
இன்டெக்ஸ் அக்வா 4.0 4ஜி, அக்வா 4ஜி மினி, அக்வா அமேஸ் பிளஸ், அக்வா பவர் IV, அக்வா பிரைம் 4ஜி, அக்வா ப்ரோ 4ஜி, அக்வா ஸ்டிராங் 5.1 பிளஸ், அக்வா டிரென்ட் லைட், எலைட்-இ1, எலைட்-இ7, அக்வா செல்ஃபி, அக்வா எஸ்1, அக்வா லயன்ஸ் 3, அக்வா ஸ்டைல் III, அக்வா லன்ஸ் 2, அக்வா 5.5 VR பிளஸ், அக்வா நோட் 5.5, அக்வா செனித், அக்வா கிளவுட் கியூ11 மற்றும் கிளவுட் ஸ்டைல் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்த கூடுதல் டேட்டா சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கூடுதல் டேட்டா புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஐந்து ரீசார்ஜ் வரை வழங்கப்படும். மார்ச் 31, 2018 வரை கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.